அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

''கெடுபிடிகளுக்கு மத்தியில் போட்டியிட்டோம்''

பல்வேறு நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியிலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் செவ்வி
பல்வேறு தமிழ் அரசியல் குழுக்களும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டதன் காரணமாக மக்களிடையே ஆரம்பத்திலிருந்து குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாகவும் இல்லாவிட்டால் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை தமது கட்சியினால் பெற்றிருக்கமுடியும் எனவும் சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
தமிழ்ச்செல்வனுடன் சம்பந்தன்-(ஆவணம்)
தமிழ்ச்செல்வனுடன் சம்பந்தன்-(ஆவணம்)
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் காரணமாக பெறப்பட்ட வெற்றியை இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெறமுடியாது போயுள்ளது, எனவே இத்தேர்தலில் பெற்ற ஆசனங்கள்தாம் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான பலத்தைக் காட்டுவதாகக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர்,அதனை முற்றுமுழுதாக மறுக்கவில்லையெனக் கூறினார்.
சிறு தமிழ் அரசியல் குழுக்கள் எதனையும் சாதிக்காத போதிலும் தமது கட்சியின் வெற்றியை பாதிக்கச் செய்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளைத் தவிர்க்கவும் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் சமரசத்தை எட்டுவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் ஏற்கப்படமுடியாத கோரிக்கைகள் காரணமாகவே தோல்வியடைந்ததாக இரா.சம்பந்தன் கூறினார்.
தமிழக தலைவர்களுடன் த.தே.கூ தலைவர்கள்
தமிழக தலைவர்களுடன் த.தே.கூ தலைவர்கள்
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளையும் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாடும் மக்களின் துயரங்களையும் தீர்க்கும் விதத்தில் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் கூறினார்.
புலம்பெயர் மக்களின் பலமும் ஆதரவும் தமக்கு அவசியமாக உள்ளதாகவும் இரு தரப்புக்கு இடையிலும் இடைவெளி ஏற்படுவதை விரும்பவில்லையெனவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG