பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசாங்கத்திடமிருந்து எழுத்து மூலமான அழைப்பு எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும், அழைப்பு வந்தால் பாராளுமன்றக்குழு கூடி பொறுப்புணர்ச்சியுடன் முடிவு எடுக்கும் என்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தெரிவித்தார்.
அழைப்புக் கிடைத்தவுடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி அது குறித்து ஆக்கபூர்வமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் பரிசீலித்து முடிவு எடுக்கும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகவும் அவற்றை உத்தரவாதப்படுத்துவதாகவும் இருக்கும். எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை நிறைவேற்றல் ஆகிய கொள்கைகளில் உறுதியாகவும் தீவிரமாகவும் அவற்றைச் செயல்படுத்துவதாகவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் இடம்பெற்ற முதன்மை வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படுவார் என்றும் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 12 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக