செல்வராகவனுடன் விவாகரத்து பெற்ற பிறகு நான் சுதந்திரமான பெண்ணாகிவிட்டேன். ஆனாலும் எத்தனை நாளைக்குத் தனியாக இருப்பது என்ற கேள்வி எழுகிறது? என்கிறார் நடிகை சோனியா அகர்வால்.
சமீபத்தில் ஒரு நாளிரவு தனது பிறந்த நாளை சத்யம் சினிமாஸ் அரங்கில் கொண்டாடினார் சோனியா அகர்வால். இதில் சிம்பு, அப்பாள் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள், சோனியாவின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
கேக் வெட்டி படு அமர்க்களமாக பிறந்த நாள் கொண்டாடிய சோனியா, இனிமேல் தனது வாழ்க்கை புதிய திசையில் செல்லும் என்றார்.
பின்னர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:
"நானும் செல்வராகவனும் விருப்பப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் பிரிய வேண்டிய சூழல் வந்துவிட்டது. எங்கள் திருமணத்தின் மோசமான பக்கங்களை புரட்டிப் பார்க்க விரும்பவில்லை.
இப்போது நான் தனியானவள்... சுதந்திரமானவள். என் முடிவுகளை நானே தீர்மானிப்பேன். அதே நேரம் எத்தனை காலத்துக்கு இப்படி தனியாகவே இருக்க முடியும்?
அதனால்தான் என் பெற்றோர் என்னை சண்டிகருக்கே கூப்பிடுகிறார்கள். ஆனால் எனக்கு சென்னையில் வசிக்கத்தான் பிடிக்கிறது!" என்றார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 12 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக