இலங்கை இராணுவத்திற்கு எதிரான வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நேற்று வெளியான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர்களே இவ்வாறு படையினருக்கு எதிராக வீடியோக் காட்சிகளை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறித்த இரண்டு ஊடகவியலாளர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்தது யார் மற்றும் அவர்களுக்கு உதவிகளை வழங்கியது யார் என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ள னர். குறித்த ஊடகவியலாளர்களின் இலங்கை விஜயம் குறித்து வெளிவிவகார அமைச்சிற்கும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக