
ஹிங்குராகொட ஸ்ரீ லங்கா விமானப்படைத் தளத்தில் சர்வதேச பாலர் பாடசாலையொன்றை ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை திறந்துவைத்தார்.
ஹிங்குராகொட விமானப்படைத் தள தளபதி டி.கெ வனிகசூரிய மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி நெலுன் குணதிலக ஆகியோரின் முயற்சியால் இப்பாலர் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டது.
விமானப் படையினருக்குச் சொந்தமான இச்சர்வதேச பாலர் பாடசாலை மூலம் சர்வதேச தரத்துக்கு அமைவான கற்கைநெறிகளை அனைத்து சிறார்களுக்கும் வழங்கவுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக