![]() | ![]() |
அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் ஓய்வூதியம் பெறுவோர் |
சிக்கன நடவடிக்கை குறித்து கிரேக்க அரசு அறிவிப்பு
கிரேக்க நாட்டு அரசு 6.5 பிலியன் டாலர்கள் பெறுமதியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது, நாட்டின் கடன் நெருக்கடியின் முழு அளவும் வெளிவந்ததிலிருந்து அது எடுக்கும் மூன்றாவது நடவடிக்கையாகும்.
சிக்கன நடவடிக்கைகளில், ஓய்வூதியங்கள் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைப்பது, விற்பனை வரி உயர்வு , அரசு அதிகாரிகளின் ஊதிய வெட்டு ஆகியவை அடங்கும்.
இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக அதென்ஸில் ஓய்வூதியம் பெறுவோர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
ஆனால் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர், ஜோஸ் மானுவல் பரோசோ, இந்த அறிவிப்பை வரவேற்று, இந்த நடவடிக்கைகள் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமான ஒன்று என்று கூறினார்.
இராக்கில் தற்கொலைத் தாக்குதல்
![]() | ![]() |
குண்டு வெடித்த ஒரு இடம் |
குண்டுதாரிகளில் ஒருவர் அரசாங்க வீடமமைப்பு அலுவலகங்களுக்கு வெளியில் காரில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மற்றைய கார்க்குண்டு சற்று நேரத்தின் பின்னர் போக்குவரத்து நெரிசல் மிக்க வீதியொன்றின் சந்தியில் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு குண்டுதாரி, காயமடைந்தவர்கள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவமனையொன்றில் வைத்து தனது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பாலத்தீன பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க அரபு லீக் ஆதரவு
![]() | ![]() |
அரபு வெளியுறவு அமைச்சர்களுடன் மஹ்முத் அப்பாஸ் |
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, அரபு லீக்கின் இந்த ஒப்புதலை வரவேற்றுள்ளார்.
ஒரு ஆண்டுக்கு மேலான காலத்துக்கு முன்னர், காசாவில் இஸ்ரேலியத் தாக்குதலை அடுத்து நிலவிய முட்டுக்கட்டை நிலையை உடைக்க மறைமுக பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா பிரேரித்திருந்தது.
அதிலிருந்து இந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
யூதக் குடியிருப்புகள் கட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று பாலத்தீனர்கள் கோரிவருகிறார்கள். இஸ்ரேலியர்களோ இதை தற்காலிகமாக நிறுத்துவதையே முன்வைக்கிறார்கள்.
கிழக்குத் திமோர் அதிபர் படுகொலை முயற்சி வழக்கு: 23 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
![]() | ![]() |
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் |
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளும் பொலிஸ் அதிகாரிகளுமாவர். இவர்களுக்கு 16 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோட்டா, தலைநகர் டிலியிலுள்ள அவரது வீட்டுக்கு முன்பாக வைத்து சுடப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
அதே தினத்தில் பிரதமர் க்ஷானா னா குஸ்மாவோ பயணித்த வாகனத் தொடரணி தாக்குதலுக்குள்ளானபோது, அவரும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
![]() | ![]() |
சாமியார் நித்தியானந்தா |
பிரபல சாமியார் பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாகக் கூறும் வீடியோ
தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள அவரது ஆஸ்ரமம் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா அவர்கள், பெங்களூரில் தனது தலைமை ஆஸ்ரமத்தை கொண்டிருக்கிறார். அங்கு மாத்திரமன்றி 33 நாடுகளில் அவரது மன்றங்கள் இருப்பதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று காண்பித்துள்ளது. இதனால் அவரது ஆச்சிரமம் தாக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் ஹரித்துவார் சென்றதாக அவரது ஆஸ்ரம வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த வீடியோ போலியானது என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இவை குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
நேபாள செய்தியாளர்கள் போராட்டம்
![]() | ![]() |
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்களில் ஒரு பகுதியினர் |
நேபாளத்தின் ஒரு பிராந்திய பத்திரிகை மற்றும் வானொலியின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
சிறிய குழுவான அந்த செய்தியாளர்கள், பதாதைகளை தாங்கிய வண்ணம், நாடெங்கும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்தை கோரினார்கள்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஆப்கானிய சிறார்களின் நீண்ட ஆபத்தான பயணம்- பெட்டகம்
![]() | ![]() |
ஆப்கானிய சிறார்கள் |
அந்த பயணத்தின் நடுவில் பல சிறார் குடியேற்றக்காரர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
ஆயினும், பிரிட்டனுக்கு வரும் அவர்களது தஞ்சக் கோரிக்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதால், அவர்களது நிலைமை இங்கு நிச்சயமற்ற ஒன்றாகவே இருக்கிறது.
ஆகவே இப்படியான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை கோருகிறது.
இது குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக