வலிகாமம் கல்வி வலயத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி சுதுமலை சின்மய பாரதி ஆகிய பாடாசலைகளில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டன.
முன்னதாக பாடசாலை மாணவ மாணவிகளின் பான்ட் இசை அணிவகுப்புடன் சிறப்பு விருந்தினனர்கள் நிகழ்விடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தேசியக் கொடி மாகாணக் கொடி பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பாடசாலைக் கட்டிடத் தொகுதிகள் சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டன.
இதே போன்று யாழ் கல்வி வலயத்திலுள்ள வைத்தீஸ்வராக் கல்லூரி திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கற்றல் நடவடிக்கைகளுக்கான கட்டிடத் தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டன.
இந்தக் கட்டிடத் தொகுதிகள் யாவும் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் புனரமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் யாழ் மற்றும் வலிகாமம் வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





























நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

































0 கருத்துகள்:
கருத்துரையிடுக