அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 மார்ச், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நவம்பர் 18 ஆம் திகதி பதவியேற்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது இரண்டாவது பதவிக்காலத்திற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் ஜி எல் பீரிஸ் இன்று ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் தமது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே அவர், ஜனாதிபதி தேர்தலை கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தி, அதில் பாரிய வெற்றியை பெற்றார்.

இந்தநிலையில் இலங்கையின் உயர்நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி அவர் இரண்டாவது தவணைக்காக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் பதவியேற்கும் காலத்திலிருந்து ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG