அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 மே, 2013

வடக்கில் முஸ்லிம், சிங்கள மீள்குடியேற்றம்; த.தே.கூ இனரீதியாக சிந்திக்கிறது: விமல்


'டக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்;, சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாக சிந்திக்கின்றனர்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் வாழும் 1000 வறிய குடும்பங்களுக்கு 175 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்புக் கடனாக வழங்கி வைக்கும் வைபவம், பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தமிழ் மக்களுக்கு மட்டுமே வட மாகாணம் பூர்வீக நிலம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது அரசியல் இலாபத்திற்காகவே தமிழ் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். காலத்திற்கு காலம் தேர்தல்கள் வரும்போது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இன ரீதியன செயற்பாடுகள் இடம்பிடிக்கின்றன. ஆனால் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மேல் மாகாணத்தில் எந்தப் பகுதிக்கும் சென்று குடியேறி வாழக்கூடிய சமாதான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஏன் வடக்கில் மட்டும் 20 வருடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை மீளக்குடியேற்றும் போது இவர்கள் இன ரீதியாகச் சிந்தித்து இன குரோதங்களை மீண்டும் தமிழ் மக்களிடையே தூவி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்?. அமெரிக்க தூதுவர் அண்மையில் கொழும்பு, காலி முகத்திடலில் குப்பை பொறுக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவர் அவருக்குரிய வரம்புக்குள் நில்லாமல் அவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் முக்கிய உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றார். மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களை பிரிப்பதற்கே துணை போகின்றார். கிழக்கு மாகணாத்தில் உள்ள மாகணசபையில் உள்ள ஆட்சியை பிரித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டாச்சியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்றார். அதே போன்று வட மாகாண சபையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியை கொண்டுவருவதற்கும் அமேரிக்கா தூதுவர் செயல்படுகின்றார். இந்த நாட்டை முழுமையாள குப்பை மேடாக்குவதற்கே அவர் முயற்சித்து வருகின்றார். நிதியமைச்சின் செயலாளர் டி.பி.ஜயசுந்தர மின்சார கட்டண அதிகரிப்பின் புதிய வரைபு திட்டத்தினை உருவாக்கியவர். ஜயசுந்தர போன்றவர்களுக்கு ஏழை மக்களின் பசி பட்டினி விளங்குவதில்லை. இம்மக்கள் பற்றி ஒரு சிறிதளவேனும் அன்பு கருணை இல்லாதவர்கள். இந்த மின் கட்டண அதிகரிப்பை மீள்மாற்றம் செய்து குறைந்த வீட்டுப் பாவனையாளர்களான ஏழை மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் மிண் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஏழை மக்களுக்கு நன்மை பயக்கூடியதொரு திட்டத்தினை ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்திற்கொண்டு மே தினத்தில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பதகாவும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார் -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG