அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு பொதுபல சேனா ஆர்வம்

பொதுபல சேனா தமிழ்க் கூட்டமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வமாக உள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பினரை நாம் சந்தித்த போது எமது பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட ஆர்வமாக உள்ளதாகவும் தமது விருப்பத்தினை அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவிடம் நான் தெரியப்படுத்தியுள்ளேன். பொதுபல சேனாவுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நல்லவிடயமாகவே கருதப்படுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG