அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 20 ஏப்ரல், 2013

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்ல


நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்ல என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். அண்மையில் 39 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.
மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்டத்தரணி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணி உதவியை கோரவில்லை என பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்களில் சிறுவர்களும், பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டத்திற்கு புறம்பான வகையில் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்கள் கேட்காவிட்டாலும் அவர்களுக்கு சட்டத்தரணி வசதிகளை வழங்கியிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG