அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

வடமாகாண தேர்தலை நடத்தக்கூடாது: விமல்


டமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தக்கூடாது. அதனை நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகள் யுத்தத்தினால் பெற்றுக்கொள்வதற்கு முயன்றதை உத்தியோகபூர்வமாக வழங்கும் நடைமுறையாகவே வடமாகாண சபைத்தேர்தலை நான் கருதுகின்றேன் என்றார். மின்சார கட்டண அதிகரிப்பானது மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. மின்சார துறை முழுமையாக அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG