அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கொழும்பில் கடத்தப்பட்ட வர்ததகர் ஹாலி- எலை பாழடைந்த வீட்டிலிருந்து மீட்பு

ன்றரை கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பில் கடத்தப்பட்டு கொழும்பு வர்த்தகர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹாலி எலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட மேற்படி வர்த்தகர் ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கும் கொழும்பிலுள்ள பொலிஸ் பயிற்சி முகாம் அதிகாரி ஒருவருக்கும் கடத்தலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, ஹாலி-எலை, மஹவத்தை எனுமிடத்தைச் சேர்ந்த 22, 28 மற்றும் 29 வயதுடைய மேலும் மூவர் இந்த கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பேலியகொடைக்கு மரண வீடொன்றுக்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரியான வர்த்தகர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட வர்த்தகர் ஹாலி-எலை, ஹுணுகலை எனுமிடத்தில் பாழடைந்த வீடொன்றில் அடைத்து க்ைகப்பட்டிருந்துள்ளார். இதன் பின்னர் வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய கடத்தல்காரர்கள் கணவரை விடுவிக்க வேண்டுமானால் ஒன்றரை கோடி ரூபா ரொக்கமாகத் தருமாறு கோரியுள்ளனர். அந்தளவு பெரிய தொகை தம்மிடம் இல்லையெனத் தெரிவித்த வர்த்தகரின் மனைவியிடம் 10 இலட்சம் ரூபா கடத்தல்காரர்களால் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து எட்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலை ஒன்று வர்த்தகரின் மனைவியால் கடத்தல்காரர்களுக்கு நுகேகொடையில் வைத்து வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கடத்தலின் பிரதான தந்திரதாரிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம். லத்தீப் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG