அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2013

நாட்டின் கல்விநிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க அரசு இடமளிக்காது: ஜனாதிபதி


நாட்டின் கல்விநிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க அரசு இடமளிக்க முடியாது. ஏனெனில் நாட்டின் எதிர்காலமானது மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளையில் மிகப் பின் தங்கியபிரதேசமான வில்கமுவ நாமினிஓய இடைநிலைப் பாடசாலையின் மும்மாடிக் கட்டிடத் திறப்பு விழாவின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- நகரப்புறப் பாடசாலைகளில் உள்ள வசதிகளுக்குச் சமமான வசதிகள் கிராமப் புறப் பாடசாலைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். நகரப் பாடசாலைகளுக்கு ஈடாக கிராமப் புறப் பாடசாலைகள் ஈட்டும் சாதனைகளைப் பார்க்கும் போது எமது அரசு நகரப்பாடசாலைகளுக்கும் கிராமப் பாடசாலைகளுக்கும் வேறுபாடு இன்றி ஒரேவித சேவை செய்வதைப் புரிந்துகொள்ளமுடியும். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி பாரிய அபிவிருத்திப் பணிகளை இவ் அரசு முன் எடுத்துச் செல்கிறது. இதனைப் பொறுக்க முடியாத பல்வேறு தீயசக்திகள் அதனை குழப்ப எடுக்கும் சதித் திட்டங்களுக்கு எவரும் ஏமாறக் கூடாது. வதந்திகளை நம்பி எமது எதிhகாலச் செல்வங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ள பாரிய சேவைகளை குழப்ப பங்களிக்கக் கூடாது என்றும்அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG