அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வட மாகாண தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஜ.ம.மு. ஆதரவு



கொ ழும்பில் தேர்தல்களின்போது தன்னை நிலைநிறுத்தியுள்ள தமிழ் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி, வட மாகாண சபை தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துமென எதிர்ப்பார்க்கப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரான கலாநிதி என்.குமரகுருபரன், தனது கட்சி வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் என தெரிவித்தார்.. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது. பொது வேட்பாளர் பட்டியலில் தனது கட்சி வேட்பாளர்கள் சேர்க்கப்படுவார்களா என்பதையிட்டு தீர்மானிக்கப்படவில்லை என கூறிய அவர், தனது கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடமாட்டாது என அவர் குறிப்பிட்டார். தற்போது வட மாகாணத்திலுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டால் தேர்தலின்போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவது அத்தியவசியமானது என அவர் கூறினார். எதிர்வரும் செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG