அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 17 ஏப்ரல், 2013

பொது பல சேன பிரித்தானியாவிற்கு முறைப்பாடு


சி றுபான்மையின சமயத்தவர்களுக்கு எதிராக பொது பல சேன பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது எனக் கூறும் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என பொது பல சேன தெரிவித்துள்ளது.
பொது பல சேன ஒரு இராணுவம் அல்ல. இது ஒரு வாண்மைத்துவ நிறுவனம் என அந்த அமைப்பின் பேச்சாளரான டிலந்த விதானகே தெரிவித்தார். "நாம் ஒரு சமய பிரிவினருக்கு எதிராக 2012ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்தோம் என்பதை உறுதியாக மறுக்கின்றோம். ஆனால் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட ஹலால் சான்றுகள் தொடர்பாக இரண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தினோம்" என அவர் குறிப்பிட்டார். "அதில் பௌத்தர்கள் ஹலால் இலச்சினை உள்ள பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என கேட்டோம். இது பிரித்தானியாவிலும் நடைபெறுவதுதான்" என டிலந்த விதானகே தெரிவித்தார். நாம் ஹலாலை தடை செய்ய வேண்டும் என ஒருபோதும் கேட்கவில்லை. அது முஸ்லிம்களின் உரிமை என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG