அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அபிவிருத்தியை வந்து பாருங்கள்: கோட்டாபய


மூன்று தசாப்தமாக நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை வந்து பார்க்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர்ந்து விமர்சனங்களை முன்வைத்துகொண்டிருப்போருக்கு அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பு, தொப்பிகலையில் (குடும்பிமலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத் தூபியை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக தொப்பிகலையில் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாரம்பரிய பூங்காவையும் பாதுகாப்பு செயலாளர் திறந்துவைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய சொந்த இடங்களை கைவிட்டுவிட்டு வாழ்ந்து வந்தனர். அழகிய பிரதேசமான இந்த பிரதேசம் தற்போது அபிவிருத்தியடைந்து வருகின்றது. அதனை புலம்பெயர்ந்தவர்கள் பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG