அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது


.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த புலி உறுப்பினர்களுடன் மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறி;த்த நபர்கள் 100க்கும் மேற்பட்ட ஏ.ரீ.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பத்து மில்லியன் தாய் பாத்களை மீளப்பெற்றுக்கொண்டுள்ளனர்.போலியான ஏ.ரீ.எம் அட்டைகளை பயன்படுத்தி தாய்லாந்து வங்கிகளில் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. சாசீலன், சுதர்சன் நடராஜ் ஆகிய இலங்கையர்களும், தாசீகுமார், அந்தோனிசாமி, ஈஸ்வரன் குமரன், ஜோதி சங்கர் மற்றும் துரைசாமி ஆகிய மலேஷியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 162 ஏ.ரீ.எம் அட்டைகளும், 18000 தாய்லாந்து பாத்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா, ஜெர்மனி மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பணம் இவ்வாறு போலி அட்டைகள் பயன்படுத்தப்பட்டு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG