அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 23 மார்ச், 2013

சிறுபான்மை மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிவ்சங்கர் மேனன்


F சிறுபான்மை மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நட்பு நாடு எனவும், பாதுகாப்பு விவகாரங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் உறவுகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு பூரண உரிமைகளும் சுதந்திரம் வழங்கப்படக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டத்தையே இந்தியா வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். வீ.கே. கிருஸ்ணா மேனன் நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனகை; குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் நட்புறவு ஆகிய இரண்டு காரணிகளையும் சமனிலையாக பேணுவது மிகவும் சிரமமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையப் பயன்பாடு தகவல் தொழில்நுட்பம் போன்ற காரணிகளினால் பாதுகாப்பு தொடர்பான நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG