வெள்ளி, 29 மார்ச், 2013

மட்டக்களப்பில் விபத்து; மூவர் பலி


ட்டகளப்பு, புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
இவ் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் ஏனைய இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். வீதியால் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மற்றும் துவிச்சக்கர வண்டி, வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர். டொல்பின் ரக வாகன சாரதியை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -->

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக