அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

செம்மொழி மாநாடு; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; கண்காணிப்பில் சிறியரக விமானம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி கோவையில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 10ஆயிரம் பொலிஸாரும், 1,000 ஊர்க்காவற் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புதியவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, கமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லாத சிறிய ரக விமானத்தை (யு.ஏ.வி.) சுமார் 15 கிலோமீற்றர் தூரத்துக்கு பறக்கவிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன.
2 1/2 கிலோ நிறையுள்ள இந்த சிறிய ரக விமானம் மின்கலத்தினால் இயங்கக்கூடிய வகையிலும் 1 1/2 மணிநேரம் தொடர்ந்து மேலே பறந்து கமரா மூலம் படம்பிடித்து உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG