ஞாயிறு, 20 ஜூன், 2010

புத்தல பகுதியில் கடத்தப்பட்ட சிறுவன் அம்பாறையில் கண்டுபிடிப்பு

மொனராகலை, புத்தல பகுதியில் கடத்தப்பட்ட 3 வயதுச் சிறுவன் அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குறித்த சிறுவன் காணாமல்ப் போயிருந்த நிலையில், சிறுவனது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸார், அம்பாறையில் நேற்று மாலை சிறுவனை கண்டுபிடித்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இனிப்புப் பண்டம் தருவதாகக் கூறி ஆண்கள் இருவர் குறித்த சிறுவனை அழைத்துச் சென்றிருந்தனர். சிறுவனின் பெற்றோரிடமிருந்து கப்பம் கோரும் நிலையிலேயே, குறித்த சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக