அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

ஆசியா கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரன் விளையாடுவாரா?

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள ஆசியா கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் தான் விளையாட வேண்டும் என முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இணையதளத்திற்கு தெரிவித்தன.

சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் கோரிக்கையை அடுத்து இவருக்கும் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் தற்போது இரண்டாவது தடவையாக பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று மாலை இடம்பெற்ற முதலாவது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
நாளைய போட்டியில் தான் விளையாடாத பட்சத்தில் கிரிக்கட் போட்டிகளில் இருந்து முத்தையா முரளிதரன் ஒய்வு பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

BATTICALOA SONG