அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 10 ஜூன், 2010

பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல்; விசாரணை நடத்த சபாநாயகர் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவினால் இன்று நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, அவர் இதற்கு இணங்கியுள்ளார்.
சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG