அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 14 ஜூன், 2010

காதலியின் கணவர் கொலை; டுபாயில் இலங்கையருக்கு மரண தண்டனை

காதலியின் கணவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு டுபாய் மேன்முறையீட்டு நீதவான் எய்சா சாரீப் மரண தண்டனை விதித்துள்ளார்.


24வயதுடைய மேற்படி இலங்கையருக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த நீதவான்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை விதித்துள்ளதாகவும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றம் குறித்த நபருக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
ஆபிரிக்கர் ஒருவரினால் தமது கணவர் படுகொலை செய்யப்பட்டதாக கொலையுண்டவரின் மனைவி முதலில் வாக்கு மூலம் அளித்த போதிலும், தீவிர விசாரணைகளின் பின்னர் தமது காதலரே கணவரை படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டக்ஸி சாரதி ஒருவரின் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டே குற்றவாளிக்கு நீதிமன்றத்தினூடாக தணடணை பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG