இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைந்து கொள்ளவோ அல்லது நிரந்தரமாக விலகிச் செல்லவோ வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள அல்லது விலகிச் செல்ல கடந்த மாதம் 30ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தக் கால அவகாசத்தில் 13 ஆயிரம் பேர் சட்ட ரீதியாக இராணுவத்திலிருந்து நிரந்தரமாக விலகிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக