புதன், 23 ஜூன், 2010

இலங்கை மனித உரிமை விவகாரங்கள்: ஐ.நா செயலாளர் குழு நியமனம்

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐ.நா பேச்சாளர் இணையதளத்துக்கு இதனை சற்று முன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்ஸூகி தருஸ்மன் இக்குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார் என்றும் அப்பேச்சாளர் மேலும் கூறினார்.
ஐ.நாவின் ஆலோசனைக்குழு நியமனத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனையை தெரிவித்துவருகிறது
எனினும்,இன்று இரவு நியமிக்கப்பட்டுள்ள இக்குழு குறித்து உடனடி பிரதிபலிப்புக்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக