பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரொருவரைக் கடத்த முயற்சித்த எட்டுச் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொல்லாவ நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான திலின கமகே உத்தரவிட்டார்.
இன்று இவர்கள் கெப்பித்திக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 12 ஆம் திகதி இரவு ஹொரவப்பொத்தானைப் பகுதியில் வீதிச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்க முற்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரைக் கடத்திச் செல்ல முயன்றதாகவும் இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவர்கள் இச்சந்தந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 17 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக