களனிப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
குறித்த சிறுமி சமய வழிபாடுகளில் ஈடுபடும் பொருட்டு, களனியிலுள்ள கோவிலொன்றுக்கு தனது பெற்றோருடன் சென்றிந்தபோதே காணாமல் போனார்.இந்நிலையில், குறித்த சிறுமி கடந்த மாதம் மாரவிலப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அதேவேளை, குறித்த சிறுமியுடன் இருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்படி சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக