அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

அமைச்சர் சம்பிக்க தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு; வரவேற்கிறார் மனோ கணேசன்

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க யாழ் நூலகத்திற்கு தான் சார்ந்த சமூகத்தினால் தீ வைக்கப்பட்டதிற்காக தமிழ் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியதை வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டது தமிழ் சிங்கள சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான நீண்ட கால பயணத்தின் முன்னேற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜாதிக ஹெல உறுமய முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று, தான் சார்ந்த சமூகத்தினால் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டமைக்கு மின்சக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளருமான சம்பிக்க ரணவக்க தமிழ் சமூகத்திடம் யாழ்பாணத்தில் வைத்து மன்னிப்புக் கோரியிருந்தார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG