ஒ ன்றரை கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பில் கடத்தப்பட்டு கொழும்பு வர்த்தகர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹாலி எலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும்.
இ லங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
திருக்கோவில், சாகாமம் - பெரியதளாவாய் வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு காவலுக்கு இருந்த ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
ம ன்னாருக்காண விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை.
இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.