அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் பலி


துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 11 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம், மிஹிந்தலை, கெலி திரப்பன்னே பகுதயிலுள்ள அச்சிறுவனின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. வேளான்மை செய்கையின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியே இவ்வாறு தவறுதலாக வெடித்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சிறுவனின் பெற்றோர் வேளான்மை செய்கைக்காக சேனைக்கு சென்ற வேளையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் சகோதரன் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது மேற்படி சிறுவன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அயலவர்களின் உதவியுடன் இச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG