அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தல்


வுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர கண்காணி;ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் -->

0 கருத்துகள்:

Pages (150)1234 Next

BATTICALOA SONG