அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

பிரேரணை தொடர்பில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவேண்டும்:சுவாமி


லங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரேரணை வரைவு தொடர்பாக கொழும்புடன் பேசி கருத்தொற்றுமை ஒன்றை எட்டவேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
தெற்காசிய விடயங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரான றொபேட் ஓ பிளேக்கை சந்தித்தபோதே சுப்ரமணியன் சுவாமி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான பிரிவினை சக்திகளின் வெற்றியாக இந்த தீர்மானம் விளங்கிக்கொள்ளப்படலாம் எனவும் இது புலிகளின் மீட்சிக்கு வழிவகுக்கும் எனவும் அது யாருக்கும் நல்லதல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள் விசாரணை ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பொஸ்னியா அல்லது சயர் நாடுகளை போன்றதல்ல எனவும் அவர் கூறினார். இலங்கையை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளவைக்கும் ஒரு விசாரணையை சர்வதேச ரீதியில் நியமிக்கப்பட்ட எந்த அமைப்பும் மேற்கொள்ளும் சாத்தியமில்லை. ஏனென்றால் ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தீர்மானம் இலங்கையின் மீது எதனையும் கட்டாயப்படுத்தி திணிக்கப்போவதில்லை எனவும் அது சர்வதேச அமைப்பு ஒன்றை விசாரணைக்காக அமைக்ககோருவதாக அமையாது எனவும் இராஜதந்திர திணைக்கள அதிகாரிகளின் பேச்சிலிருந்து தான் அறிந்து கொண்டதாக சுவாமி தெரிவித்துள்ளார். இது புலிகள் சார்ந்த சக்திகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG