அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 30 மார்ச், 2013

'பெஷன் பக்' மீதான தாக்குதலுக்கு காதல் விவகாரமே காரணம்: பொலிஸ்


பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு காதல் விவகாரமொன்றினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையே காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த ஆடை விற்பனை நிலையமானது இனந்தெரியாத நபர்களினால் குறி வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவ்விற்பனை நிலையத்துக்கு அறிகிலுள்ள பெக்கோ வாகன நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமே ஆடை விற்பனை நிலையம் சேதமானதற்கு காரணமெனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், குறித்த வாகன விற்பனை நிலையத்தில் ஊழியர் ஒருவரின் காதல் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பெப்பிலியான – கொஹுவல வீதியில் அமைந்துள்ள மேற்படி ஆடை விற்பனை நிலையமானது நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்கு உள்ளானது. சுமார் 400 பேர் அடங்கிய குழுவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குறித்த வாகன நிலையத்தில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் பௌத்த மதத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவருக்கும் இடையிலான காதல் விவகாரத்தை அடுத்து அச்சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்று சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தனர். இதற்கமைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி இளைஞன், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையிலேயே நேற்றைய தினம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG