இ லங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்,பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அந்த மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 3 ஆம் திகதி அதிகாலை பிடித்துச்சென்றது. மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகுகள் கற்பிட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்று இலங்கை கடற்படையினர் அப்பாவி இந்திய மீனவர்களை சிறைபிடித்துச் சென்று தொந்தரவு செய்வது கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகி விட்டது.
இது மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பின்மை மற்றும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு மீனவ அமைப்புகளும் தமிழக அரசிடம் முறையிட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இன்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு எப்போதும் உறுதி அளிக்கிறது. எனவே, சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்ய இலங்கை அரசை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 4 மார்ச், 2013
16 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்: பிரதமருக்கு ஜெயா கடிதம்
இ லங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்,பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அந்த மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 3 ஆம் திகதி அதிகாலை பிடித்துச்சென்றது. மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகுகள் கற்பிட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்று இலங்கை கடற்படையினர் அப்பாவி இந்திய மீனவர்களை சிறைபிடித்துச் சென்று தொந்தரவு செய்வது கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகி விட்டது.
இது மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பின்மை மற்றும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு மீனவ அமைப்புகளும் தமிழக அரசிடம் முறையிட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இன்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு எப்போதும் உறுதி அளிக்கிறது. எனவே, சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்ய இலங்கை அரசை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக