அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

இலங்கை இந்தியாவுக்கு எதிரியான நாடு அல்ல

லங்கை இந்தியாவுக்கு எதிரியான நாடு அல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் தெரிவித்துள்ளார்.
'எங்களுக்கு கவலை இருக்கலாம். கோபம் இருக்கலாம். ஆனால் இலங்கை எதிரியான நாடு என நாங்கள் கூறவில்லை' என இராஜ்ஜிய சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை பற்றிய விவாதத்தின்போது அவர் கூறியுள்ளார். 'தமிழ்நாட்டில் உள்ள எனது நண்பர்கள் தெரிவிக்கும் விசனத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். இது உங்களுடைய விசனம் மட்டுமல்ல என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்' எனவும் அவர் கூறியுள்ளார். 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். எவ்வாறாயினும் பொறுப்புக் கூறுதல் இலங்கையிலிருந்து வர வேண்டும். இல்லாவிடின் அதற்கு எதிர்காலம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 'ஐக்கிய நாடுகளில் நாம் என்ன கூறவுள்ளோம் என்பதை இன்று வெளிப்படுத்த முடியாது. நாம் இறுதியான முடிவு பற்றி தீர்மானித்ததும் நாம் உங்களிடம் கூறுவோம். இலங்கையின் பிரச்சினைகளுக்கு நாம் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என விரும்புகின்றோம். இலங்கையில் இடம்பெற்ற மோதல் காரணமாக நாம் எல்லோருமே துன்பப்பட்டோம்' எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 'பல நாடுகள் இந்திய பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக வேண்டும் என விரும்புகின்றன. இந்த அவையில் பிரிவுகள் இருக்கக் கூடாது. பிரிவுகள் இருப்பதால் வெளியுலகத்துக் சரியான செய்தி கிடையாது போகும்' எனவும் அமைச்சர் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG