அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

'அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க இலங்கை தவறிவிட்டது'

னித உரிமைகள் தொடர்பில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இலங்கை அரசாங்கம் உள்நாட்டு சமூகத்தினர் மீது நடத்திய தாக்குதலின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 615 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2013 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து 90 நாடுகள் தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பில் கடந்த வருடம் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. பல்வேறுபட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் கீழ் தடுத்து வைத்தல் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை பாதுகாப்பு படையினரால் தமிழ் மக்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளும் வகைதொகையின்றி கைதுசெய்தலும் துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளன. தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீள்குடியேற்றத்திற்காக மீண்டும் கிராமங்களுக்கு திரும்பியனுப்பப்படும்போதும் கடும் கண்கானிப்பின் கீழ் இருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் இராணுவம் கூடுதலாக இருக்கின்றனர். இது சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை சீர்குலைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களின் உரிமைகள் கவனத்தில் கொள்ளப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு காணவேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG