அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 நவம்பர், 2012

நீதிமன்றத்தின் அறிவித்தலை நிராகரித்தார் சபாநாயகர்

நாடாளுமன்றத்திற்கோ தனக்கோ அல்லது நாடாளுமன்ற குழுக்களுக்கோ வெளி அமைப்புக்கள் கட்டளையிடவோ, உத்தரவிடவோ முடியாது என தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை எவ்வித தடங்களும் இன்றி நிராகரித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சபாநாயகருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தெரிவுக்குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்ததன் பின்னரே தெரிவுக்குழு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG