அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்


2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.
2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல். பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு - செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வறிய பிரதேச மாணவர்களுக்காக சத்துணவும் சப்பாத்தும் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு தடவை சீருடை. சுற்றுலாத்துறை வருமானமாக 2.5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சியினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்போகம் வரை நீக்கம். வட்டி முற்றாக நீக்கம். நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 102 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. லக் சத்தொச விற்பனை நிலையங்களை ஆயிரமாக அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா. சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஹெக்ரெயர் ஒன்றுக்கான உதவித் தொகை 3 இலட்சத்திலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிப்பு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய, உற்பத்திகளின் தரத்தை முறையாகப் பேணிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உதவி ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் பொலனறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்தத்திட்டமிட்டுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை. சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதம்) ஒதுக்கீடு. ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு வட்டியில்லா கடனைப் பெற்றுக்கொடுப்பதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 25 வீத வரி அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு நிரந்தர வருமானமில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5000 ரூபா -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG