அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

யாழ். பல்கலை வளாகத்தில் படையினர் குவிப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெருமளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேல் மாடியிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அண்டிய வீதியால் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்படுகின்றனர். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியதவர்களே துப்பாக்கியை காட்டி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG