அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

முஸ்லிம் மக்களின் உரிமைகளை மு.கா பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது: உலமா கட்சி


கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் முதலமைச்சர் கோஷம் எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான முதலமைச்சரை இழந்து அவமானத்தை சந்தித்துள்ளது. அதே போல் முதலமைச்சர் பதவி பற்றி பெரிதாகப் பேசிய அ. இ. முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இப்பதவி கிடைக்கவில்லை. முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசாத அத்தாவுல்லாவின் கட்சிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் முஸ்லிம் முதலமைச்சர் பற்றிப்பேசாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம் முதலமைச்சர் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஹக்கீம், அத்தாவுல்லா, ரிஷாத் ஆகியோரின் உதவியுடன் ஆட்சியைக்கைப்பற்றி தனது கட்சி பிரமுகரை அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு உறுப்பினரை முதலமைச்சராக்கியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே இதில் வெற்றி பெற்றுள்ளார். மு.கா.வின் சூழ்ச்சியுடன் அரசாங்கமே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் என நாம் பல தடவைகள் கூறினோம். வேட்பு மனுத் தாக்கல் தினத்தன்று இதனை நாம் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு நேரடியாகக் கூறினோம். இன்னும் இரண்டரை வருடத்துக்குப்பின்னர் தான் முஸ்லிம் காங்கிரஸ{க்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும.; அது வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கைகட்டி, வாய் மூடி நிற்க வேண்டிய கேவலம் தொடரும். அரசுடன் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டாலும் மாகாண சபை இரண்டு வருடங்களில் கலைக்கப்படலாம். ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களை அரசின் கொத்தடிமைகளாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றி விட்டது. தமக்கு வாக்களித்தால் மட்டுமே பள்ளிவாயல்களை காக்க முடியும் எனக் கூறிய முஸ்லிம் காங்கிரஸ், இன்று தமது உறுப்பினர்களைக்கூட காக்க முடியாமல் ஒட்டுமொத்த வியாபாரத்தை செய்துள்ளது. கிழக்கு முஸ்லிம் சமூகம் குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாறி விட்டதற்கான பொறுப்பை அம்மக்களே ஏற்க வேண்டும். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG