அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

யாழ்ப்பாண மட்பாண்ட கலைஞர் கூட்டுறவுச் சங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அங்குரார்பணம்


யாழ்ப்பாண மட்பாண்ட கலைஞர் கூட்டுறவுச் சங்க அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம்  காரங்கால் ஒழுங்கை ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு எனும் முகவரியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மட்பாண்ட கலைஞர் கூட்டுறவுச் சங்க அங்குரார்பண நிகழ்வினைத் தொடர்ந்து உற்பத்திக் கூடத்தை பார்வையிட்டதுடன், மட்பாண்ட தொழிற்துறை தொடர்பில் துறைசார்ந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன் போது பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன், கைத்தொழில் அபிவிருத்திச் சபை பிரதிப் பணிப்பாளர் சி.சிவகெங்காதரன், ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரவீந்திரதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:

BATTICALOA SONG