அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் திறப்பு


டபகுதியில் உயர்கல்வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பிரிவுக்கான புதிய கட்டிடத்தை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இன்றைய தினம் (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரரிவிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கூடாக உயர்கல்வியை வழங்குவதற்கும் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கும் மகிந்த சிந்தனைக்கமைவாக செயற்திட்டற்களை முன்னெடுத்துவரும் நிலையில் எதிர்காலத்திலும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன் காரணமாக கடந்த காலங்களை விடவும் தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பேராசியர்களையும் விரிவுரையாளர்களையும் உள்வாங்கிய அதேவேளை, அதிகளவான மாணவர்களையும் உள்வாங்கியுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டிய உயர்கல்வி அமைச்சர் அவர்கள் யுத்த காலத்தின் போது வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியிலும் உயர்கல்வியில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது என்றும் இன்று அந்த நிலை மாறி ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ள நிலையில் உயர்கல்வித் துறையை மேம்படுத்துவதிலும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைவாக மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டடு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உயர் கல்வி அமைச்சர் இதன்போது உறுதிமொழி வழங்கினார்.

குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுனாமி புனர்வாழ்வுக் கருத்திட்டத்திற்கமைய யாழ் பல்கலைக்கழக இணை சுகாதார கல்விப் பிரிவுக்காக 60 மில்லியன் ரூபா செலவில் 3 மாடிகளைக் கொண்டதாக நவீன வசதிகளுடன் இப்புதிய கட்டிடம் அமையப் பெற்றுள்ளது.

மருத்துவ பீடத்தின் பின்புறமாகவுள்ள பல்கழைக்கலக மைதானத்திற்கு அண்மையாக அமையப்பெற்றுள்ள இக்கட்டிடத் தொகுதியில் மருத்து ஆய்வு கூட விஞ்ஞானம், தாதியியல் மற்றும் மருந்தாக்கவியல் ஆகியவற்றை ஒண்றினைத்து இணை மருத்துவ விஞ்ஞான அலகு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பிரதான வாயிலிலிருந்து அமைச்சர்களான உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் உள்ளிட்டோர் மங்கள வாத்தியம் சகிதம் இவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தொடக்க நிகழ்வுகளை அடுத்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், நினைவுக் கல்லையும் உயர் கல்வி அமைச்சர் திரைநீக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தின் ஒவ்வொரு கூடங்களையும் அதிதிகள் இதன்போது பார்வையிட்டனர்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி கலாநிதி பாலகுமார் தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தி மித்திர ஏக்கநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதன்போது சமயத் தலைவர்கள், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண மற்றும் உயர்கல்வி அமைச்சினதும் யாழ் பல்கலைக்கழகத்தினதும் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.












-->

0 கருத்துகள்:

BATTICALOA SONG