அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவோருக்கு இனி முதலமைச்சர் பதவி இல்லை: ஜனாதிபதி


மாகாணசபை அமைச்சர்களாக பதிவியேற்பவர்கள், பொய் வாக்குறுதிகளை வழங்காமல் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாடுபட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெறுவோருக்கு முதலமைச்சுப் பதவி வழங்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து அமைச்சர்களும் தங்களது மாகாணம், மற்றும் கிராமங்களுக்காக சேவையாற்ற வேண்டும். மாகாணசபை என்பது ஒரு வெள்ளை யானை போன்றது எனும் மனப்போக்கை மாற்றியமைக்கும் வகையில் செயற்படும் பொறுப்பு அமைச்சர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களாக பதவியேறோர் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG