ச மூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் சிவில் பாதுகாப்புக் குழுக்களில் உள்வாங்க இடமளிக்கக்கூடாது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-->யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நடைபெற்று முடிந்த இந்த காலப்பகுதியில் சில தீயசக்திகள் மக்களிடையே குழப்பும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இருக்கும் உறவுகளை குழப்ப சில சமூகவிரோதிகள் சிவில் பாதுகாப்பு குழுவில் இணைந்து செயற்பட நினைப்பார்கள். அவ்வாறானவர்களை இணைப்பதற்கு சிவில் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் இடமளிக்க்கூடாது. தமது சமூக விரோத செயல்களை சிவில் பாதுகாப்பு குழுவில் இருந்து கொண்டு செய்ய முனையும் நிலையில் இதுகுறித்து மக்களும், பொலிஸாரும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்;டார்.
ஒவ்வொரு சிவில் பாதுகாப்பு குழு கூட்டமும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். அபிவிருத்தி மற்றும் மொழி அமுலாக்கம் சமநிலையில் இருந்து வருகின்ற நிலையில் சிவில் அமைப்புக்கள் சமூக அக்கறையுடன் முன்னோக்கி செயற்பட வேண்டும். எமது நாடு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க பிரதேசங்களில் நடைபெறும் குற்றச்செயல்களை இணங்கண்டு அவற்றை தகுந்த முறையில் தீர்க்க நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உரையாற்றும் போது ஒவ்வொரு கிராம மட்டத்திலும் நடைபெறுகின்ற குற்றச்செயல்கள் மற்றும் தவறுகள் சுட்டிக் காட்டப்படும் சந்தர்ப்பங்களில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் முன் நின்று தீர்த்து வைக்க வேண்டும். அவ்வாறு தீர்த்து வைக்கப்படுமானால் நல்ல சமூக கட்டமைப்பினை உருவாக்க முடியுமெனத் தெரிவித்தார்.
இதன்போது சமூக மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றைக்கு துறைசார்ந்தோர் ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக இதன் போது ஆராயப்பட்டது
இந்நிகழ்வில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குகநேசன், யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட, யாழ். மாவட்ட பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக