அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 1 செப்டம்பர், 2012

யுத்தத்திற்குப் பின் யாழ்ப்பாணம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் அனைத்து துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தொரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் (30) யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்ற இலங்கை ஊடகவியல் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள இயல்புச் சூழலில் மக்களின் வாழ்வியல் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் நாம் எதிர்பார்த்ததனை விட பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. யுத்த காலத்தில் காணப்பட்ட எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை தற்போது இல்லை. காணாமல் போதல், கடத்தல், அச்சுறுத்தல், கப்பம் வாங்குதல், போன்ற நிலைகளை சீர்குலைக்கும் எவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவங்களும் தற்போது நடப்பதில்லை. மக்கள் நிம்மதியான வாழ்வை அனுபவிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி கடற்றொழில், விவசாயம், வியாபாரம், சிறுகைத்தொழில்கள், உல்லாசத்துறை போன்ற துறைகளிலும் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் யுத்த காலத்தோடு ஒப்பிடுகையில் பாரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமின்றி முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் மேற்கொள்ளவும் தயாராகவுள்ளனர்.

எனவே கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், அபிவிருத்திகளையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இருப்பினும் மக்களுக்கான எல்லாத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டது என்று கூறமுடியாது. மக்களுக்கு இன்னும் ஏராளமான தேவைகள் ப+ர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அவையும் எதிர்வரும் காலங்களில் படிப்படியாக நிச்சயம் பூர்த்தி செய்யப்படும்.

முப்பது வருட யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை ஒரு குறுகிய காலத்திற்குள் தீர்த்து வைக்க முடியாது. இருப்பினும் நாம் அனைவரும் எதிர்பார்த்ததனை விட யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை வரவேற்கத்தக்க மகிழ்ச்சிகரமான விடயமே எனத் தொவித்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பில் இலங்கை ஊடகவியல் கல்லூரி மாணவிகள் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போது,

உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்றும் காணப்படுகின்றன. ஆனால் ஆரம்பத்தில் இருந்ததனை விட தற்போது காணப்படுகின்ற உயர்பாதுகாப்பு வலயங்கள் குறைந்தளவானதே. எனவே எவ்வாறு மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்களோ அதேபோன்றே எஞ்சிய உயர்பாதுகாப்பு வலயங்களும் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எவரும் மறுத்துவிட முடியாது என்பதனையும் சுட்டிக் காட்டினார்.

இலங்கை ஊடகவியல் கல்லூரியின் விரிவுரையாளர் மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊடக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





0 கருத்துகள்:

BATTICALOA SONG