அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தயாசிறி குறித்து அறிக்கை கோரினார் ரணில்


ஐ. தே.கவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் அறிக்கை கோரியுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தொடர்பான அறிக்கை ஏற்கெனவே கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். இதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ள தான் தயார் அவரின் அரசியல் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு சதி இடம்பெறுவதாகவும் டெய்லி மிரருக்கு தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். என்னைப்பற்றி வெளியான பொய்யான செய்திகள் குறித்து நான் பதிலளித்தேன். எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஒழுக்காற்று குழுவின் முன்னிலையில் ஆஜராகி உண்மை நிலை குறித்து விளக்கமளிப்பதற்கு தான் தயாhகவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, அரசாங்கத் தரப்புக்கு மாறும் திட்டமில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG