அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராகவே ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும்: தயாசிறி


னக்கு எதிராக அல்லாமல் ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணைக்காக ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவிற்கு வந்தபோதே செய்தியளார்களிடம் அவர் இவ்வாறு கூறினார். 'ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட Nவுணு;டும். எனக்குஎ திராக அல்ல. இவர்கள் ஏன் இதை செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இவர்கள் எனது தேர்தல் பிரச்சாரத் திட்டங்களை முடக்கியுள்ளனர்' என அவர் கூறினார். கட்சிக்கு பாதகமான விதத்தில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில், சட்டத்தரணி யசந்த பெரேரா தலைமையிலான இருவர் கொண்ட விசாரணைக் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜராகுமாறு தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டிருந்தார். 'குற்றப்பத்திரத்திற்கு நாம் மூன்று ஆட்சேபனைகளை தெரிவித்தோம். இது தொடர்பான தீர்மானம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. என்னை எதுவும் தடுக்க முடியாது. ஆயிரம் விசாரணைகளை எதிர்கொள்ள நான் தயார்: என அவர் கூறினார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG