அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மஹிந்த – பான் கீ மூன் இன்று முக்கிய சந்திப்பு ; தெஹ்ரானில் தீர்வு முயற்சி குறித்துப் பேச்சு


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குமிடையிலான முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பு இன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறுகிறது.அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின் ஓர் இடைவேளையின்போது இந்தச் சந்திப்பு இடம்பெறுமென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. ஐ.நா. பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுமாலை “சுடர் ஒளி”யிடம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபைபொதுச்செயலாளருடனான சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையான விளக்கங்களை அளிப்பார் என்றும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG